ஆவடி, மே 21- ஆவடி பெரியார் மாளிகையில் 18.5.2025 அன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற உண்மை வாசகர் வட்ட கூட்டத்தில் செயலாளர் க.கார்த்திகேயன் அறிமுக உரை ஆற்றிட, மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் வர வேற்புரையாற்றினார்.
மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் முன்னிலை வகித்தார். ஊடகவியலாளர் கரிகாலன் ‘இன்றைய நெருக்கடியும் தீர்வும்’ என்ற தலைப்பில் இந்தியா- பாகிஸ்தான் போர் அமெரிக்காவின் தலையீடு பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம் செயல்பாடு, அதைத் தகர்க்க எவ்வாறு செயல்பட்டுத் தீர்வு காண வேண்டுமென எழுச்சியுரையாற்றினார்.
ஜானகிராமன் மற்றும் பேச்சாளர் கா.மு.ஜான், ஆவடி புருசோத்தமன் ஆகியோர் ஊடகவியலாளர் கரிகாலனுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர். நிகழ்வில் மாவட்ட, இளைஞரணி, மகளிரணி, பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து இயக்கத் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
இறுதியாக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் வி.சோபன்பாபு நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.