தமிழ்நாட்டில் மாணவர்கள் தேர்ச்சி 10-ஆம் வகுப்பில் 93.80 சதவீதம் ; 11-ஆம் வகுப்பில் 92.09 சதவீதம்

Viduthalai
3 Min Read

சென்னை, மே 16 தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10, 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (16.5.2025) காலை 9 மணியளவில் வெளியிட்டார். 10-ஆம் வகுப்பில் 93.80%, 11-ஆம் வகுப்பில் 92.09% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் 10-ஆம் வகுப்பு தேர்வை சுமார் 9 லட்சம் பேரும், 11-ஆம் வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 21-இல் தொடங்கி 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே வெளியிட தேர்வுத் துறை முடிவு செய்தது. அதன்படி, 10, 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று காலை 9 மணியளவில் வெளியிட்டார்.

10-ஆம் வகுப்பில் மொத்தம், 93.80 சதவீதம் மாணவ – மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 2.25% மொத்த தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளது. இருப்பினும், வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவியர் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தின்படி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்கள் முதல் அய்ந்திடத்தில் உள்ளன. அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் அய்ந்து மாவட்டங்களிலும் சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களே இடம் பெற்றுள்ளன.

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:
தமிழ்: 98.09%
ஆங்கிலம்: 99.46%
கணிதம்: 96.57%
அறிவியல்: 97.90%
சமூக அறிவியல்: 98.49%

பாடவாரியாக சதம் அடித்தவர்கள்
எண்ணிக்கை:
தமிழ்: 8
ஆங்கிலம்: 346
கணிதம்: 1996
அறிவியல்: 10838
சமூக அறிவியல்: 10256 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

11-ஆம் வகுப்பில் மொத்தம், 92.09 சதவீதம் மாணவ – மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 95.13 சதவீதமும், மாணவர்கள் 88.70 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவியர் 6.43 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள் ளனர்.
தேர்ச்சி விகிதத்தின்படி, அரியலூர், ஈரோடு, விருதுநகர், கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் முதல் அய்ந்திடத்தில் உள்ளன. அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் அய்ந்து மாவட்டங்களில் அரியலூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளன.

பாடப் பிரிவுகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:
அறிவியல் பாடப் பிரிவுகள்: 95.08%
வணிகவியல் பாடப் பிரிவுகள்: 87.33%
கலைப் பிரிவுகள்: 77.94%
தொழிற்பாடப் பிரிவுகள்: 78.31%

பாடவாரியாக நூற்றுக்கு நூறு எடுத்தவர்கள் எண்ணிக்கை:
தமிழ் – 41
ஆங்கிலம் – 39
இயற்பியல் – 390
வேதியியல் – 593
உயிரியல் – 91
கணிதம் – 1338
தாவரவியல் – 4
விலங்கியல் – 2
கணினி அறிவியல் – 3535
வரலாறு -35
வணிகவியல் – 806
கணக்குப் பதிவியல் -111
பொருளியல் – 254
கணினிப் பயன்பாடுகள் – 761
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் – 117

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *