திருநெல்வேலி மே 16 “தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் கடனில் ரூ.2 லட்சம் கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களி டம் சட்டப் பேரவை தலை வர் மு.அப்பாவு கூறியது: தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்கும்போது ரூ.4.5 லட்சம் கோடி கடன் இருந்தது. கடன் வாங்குவதற்கு ஒன்றிய அரசு விதித்துள்ள விதிகளுக்குட்பட்டு தான் தமிழ்நாடு அரசு கடன் வாங்குகிறது. கடன் வாங்கி உள் கட்டமைப்பை அரசு வலுப்படுத்திவருகிறது. பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. தமிழ்நாட் டில் புதிய தொழில் தொடங்கப் பட்டதால் தான் இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 9.69 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதி ஆயோக் கூறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டதால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசு 67 ஆண்டு களில் ரூ.55 லட்சம் கோடி கடன் வாங்கியது. பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் ரூ.126 லட்சம் கோடி கடன் பெற் றுள்ளது. ஒன்றிய அரசு பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கியும், அந்த மாநிலங்கள் வளர்ச்சி பெறவில்லை. ஒன்றிய அரசு முறையாக நிதியை வழங்காத நிலையில்தான் தமிழ்நாட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கடன் வாங்கப்பட்டது.
பெரிய கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு ரூ.16 லட்சம் கோடி வரை ஒன்றிய அரசு கடன் தள்ளுபடி செய்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொழிலதிபர்கள் 10 மடங்கு சொத்துகள் அதிகம் வைத் துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைபோல் தமிழ்நாட்டின் கடனில் ரூ.2 லட்சம் கோடி கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்று வலுவான தலைவர்கள் இல்லை என்று பவன் கல்யாண் எந்த நோக்கத்தில் கூறினார் என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் யார் வலுவான தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.