புதுடில்லி, மே.15– ஆகம விதிகளை கடைப் பிடிக்காதகோயில்களில் அனைத்து ஜாதியைச் சேர்ந்த அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்று தமிழ் நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வழக்கு
தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பல கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப் பட்டு உள்ளனர். அரசின் இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு இருந்தாலும், ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு பூஜை கள் நடத்தப்படும் கோயில்களில் அதற்குரிய பிரிவை சேர்ந்தவர்கள் அல்லாதவர்களை அர்ச்ச கர்களாக நியமிப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சிறீ ரங்கம் உள்ளிட்ட ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் ஆகமத்திற்கு எதிராக அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்கள் நியமிப்பதற்கோ, தேர்வு செய்யவோ தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2 நீதிபதிகள் அமர்வு
இந்த வழக்கோடு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில் களிலும் அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்ற வழக்கையும் சேர்த்து நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தல் அடங்கிய அமர்வு நேற்று (14.5.2025) விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் வள்ளிநாயகம், குரு கிருஷ்ணமூர்த்தி, வக் கீல்கள் ஜி. பாலாஜி, யானை ராஜேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மூத்த வழக்குரைஞர் துஷ் யந்த் தவே வாதிட்டனர்.
அர்ச்சகர் பணியிடங்கள்
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான ‘தமிழ்நாட்டில் 2,500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதனை நிரப்பும் வகையில் உச்சநீதிமன்றம் ஏற்ெகனவே பிறப்பித்த தடை உத்தரவை நீக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது.
இதனையடுத்து மனு தாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ‘ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள் மிக குறைவாக உள்ளன. அந்த கோவில்களில் அனைத்து ஜாதி அர்ச்ச கர்களை நியமனம் செய்யக்கூடாது, ஆகம விதிகளை பின்பற்றாத கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமனம் செய்ய ஆட் சேபனை இல்லை’ என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுக்கு அனுமதி
இருதரப்பு வாதங்களை யும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஆகம விதிகளை கடைப் பிடிக்கும் கோவில்கள், ஆகம விதிகளை கடைப் பிடிக்காத கோவில்களை கண்டறிய சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த குழுவுக்கு 3 மாதம் அவகாசம் அளிக்கிறோம். மேலும் ஆகம விதிகளை கடைப்பிடிக்காத கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் களாக நியமிக்கவும், ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் போதுமான அர்ச்சகர்களை நியமிக் கவும் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்கிறோம். மேலும் விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.