இன்னும் 5 நாள்களில்
மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 15ஆம் தேதி 1.10 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு அரசு ரூ.1,000 டெபாசிட் செய்து வருகிறது. மேலும், அடுத்த மாதம் முதல் இந்தத் திட்டத்தில் புதிய பயனாளர்களை சேர்க்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த மாதத்திற்கான ரூ.1,000 இன்னும் 5 நாள்களில், அதாவது வருகிற 15ஆம் தேதி டெபாசிட் செய்யப்பட இருக்கிறது.
7 ஆண்டு சிறை தண்டனை
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம்
சிறை தண்டனை பெற்ற மேனாள் அமைச்சரும் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ஜனார்த்தன் ரெட்டியை கருநாடக சட்டப்பேரவை தகுதி நீக்கம் செய்துள்ளது. சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக அவருக்கு சிபிஅய் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனையடுத்து, அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் அவரால் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
12ஆம் தேதி மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் பேச்சு: மிஸ்ரி
வருகிற 12ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரல்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரல்கள் இன்று மதியம் 3 மணியளவில் இந்திய அதிகாரிகளுடன் பேசியதாகவும், அதில் நிலம்,வான், கடலில் நேற்று மாலை 5 மணி முதல் சண்டை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.