l
இர. கிருஷ்ணமூர்த்தியின் 50ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று தருமபுரி இர. கிருஷ்ணமூர்த்தி, சங்கீதா குடும்பத்தினர் பெரியார் உலக நன்கொடையாக ரூ.25,000, பெரியார் மருத்துவ நிதியாக ரூ.25,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். இதுவரை வழங்கிய நன்கொடை ரூ.1,00,000 ஆகும். l சுயமரியாதைச் சுடரொளிகள் பே தேவசகாயம், அன்னத்தாயம்மாள் ஆகியோரின் மகன் வழி பேரனும் இ. ஈரோட்டு பெரியார், நித்தியா ஆகியோரின் மகன் இ. தெய்வசன் பெரியார் மேல் நிலைப்பள்ளி அரசுத் தேர்வில் 511 மதிப்பெண் பெற்றதன் மகிழ்வாக ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.5110த்தை எடிசன்ராசா தமிழர் தலைவரிடம் வழங்கினார். l கன்னியாகுமரி திராவிடர் கழகத்தின் சார்பாக (66ஆவது முறையாக) 46 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.48,000அய் மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். (சென்னை, 10.5.2025)