திருச்சி, ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் உள்ள நமது பள்ளிகளான பெரியார் அறக்கட்டளைகள் நடத்தும் பள்ளிகளின் பிளஸ் டூ – தேர்வு முடிவுகள், நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கின்றன.
நூற்றுக்கு நூறு வெற்றி பெற்ற மாணவக் கண்மணிகளுக்கும், அப்பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியைகள், ஆசிரியைகள், ஆசிரியப் பெருமக்கள், தாளாளர், பணியாளர் உள்பட அனைவருக்கும் நமது வாழ்த்துகள்!
செயலாளர்,
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
8.5.2025