மணப்பாறை, மே 7– திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் புரட்சியாளர் அம்பேத்கர் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் – மே நாள் விழா பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ரெ.பாலமுருகன். மணப்பாறை ஒன்றிய தலைவர் வரவேற்புரையாற்றினார். மணப்பாறை நகர செயலாளர் சி.எம்.எஸ்.ரமேஷ் தலைமையேற்றனர். துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.
ஞா. ஆரோக்கியராஜ் திருச்சி மாவட்ட தலைவர். சு. மகாமணி. மாவட்ட செயலாளர், துரை.காசிநாதன் திமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர், வழக்குரைஞர்.துரை.அழகிரி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மணப்பாறை, ரெஜினா பால்ராஜ் திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவர் முன்னிலையேற்றனர். கழக நிர்வாகிகள் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
இறுதியாக மணப்பாறை ஒன்றிய செயலாளர் வீ.அசோக் நன்றியுரையாற்றினார்.