திருப்பத்தூர். மே 5- திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தில் அமைந்துள்ள பொதிகை கல்லூரி யில் 4.5.2025 நண்பகல் 2 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட கழக தோழர் கள் கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் பெ. கலைவாணன் அனைவரையும் வரவேற்று, இக்கூட்டம் ஆசிரியர் அவர்கள் அழைப்பின் பேரில் 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை சென்னை பெரியார் திடலில் நடைபெறும் மாநில இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் நம் மாவட்டம் சார்பில் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்பது குறித்து இக் கூட்டம் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் மற்றும் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் ஆசிரியர் அவர்கள் நம்மை குடும்பம், குடும்பமாக சந்தித்து கழக பணிகள் குறித்து கலந்துரையாடவிருக்கிறார். அவர் கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள் குறைந்தது 50 பேராவது மாவட்டம் சார்பில் பங்கேற்க வேண்டும். இதற்கு மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகம், மற்ற கழக தோழர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பேசினார்கள்.
மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் நடைபெறும் கலந்து ரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வாகனம் ஏற்பாடு செய்யப்படும் என்றும். அதிக எண்ணிக்கையில் அதில் கழக தோழர்கள் என் தலை மையில் பங்கேற்பார்கள் என்று பேசினார்.
கந்திலி ஒன்றியத் தலைவர் பெ.ரா.கனகராஜ் பயண செலவிற்கு உடனடியாக ரூ. 500 வழங்கினார்.
இந்த கலந்துரையாடல் கூட் டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி. ஏ. சிற்றரசன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ. டி. சித்தார்த்தன், நகரத் தலைவர் காளிதாஸ்,விடுதலை வாசகர் வட்டத் தலைவர் ஞானம், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் வ. புரட்சி, விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம். என். அன்பழகன், மாவட்ட மகளிரணி தலைவர் இரா. கற்பகவல்லி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயா அன்பழகன்,கந்திலி ஒன்றியத் தலைவர் பெ. ரா. கனகராஜ், கந்திலி ஒன்றியச் செயலாளர் இரா. நாகராசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கோ. திருப்பதி, சோலையார்பேட்டை நகர அமைப்பாளர் இராஜேந்திரன், மாவட்ட இளைஞரணிசெயலாளர் மோ. நித்தியனாந்தம், மாவட்ட மாணவர் கழகம், செயலாளர் மோ. வசீகரன், நகர செயலாளர் ஏ. டி. இந்திரஜித், சுந்தரம் பள்ளி கிளைத் தலைவர் கோ. சங்கர், லக்கினாயக்கன்பட்டி கிளைத் தலைவர் சரவணன், லக்கினாயக்கன்பட்டி கிளைச் செயலாளர் இலட்சுமணன், காக்கங்கரை கிளைத் தலைவர் சந்தோஷ் குமார், தொழிலாளரணி ஆலோசகர் அக்ரி அரவிந்த், தொழி லாளரணி அமைப்பாளர் க. முருகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக து. செயலாளர் குமர வேல், நகர இளைஞரணி செயலாளர் கா.நிரஞ்சன், இனியவன், உதயவன், பெரியார் செல்வன், மற்றும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி. எ. சிற்றரசன் நன்றி தெரிவித்தார்.