புதுடில்லி, மே. 3- காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் உயிரிழந்த கான்பூரை சேர்ந்த சுபம் திவிவேதியின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது சுபம் திவிவேதி உள்பட பஹல்காமில் கொல்லப் பட்டவர்களுக்கு தியாகி தகுதி வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பஹல்காமில் கொல்லப்பட்டவர் களுக்கு தியாகி தகுதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத் தினரின் துயரத் திலும், அவர்களுக்கு தியாகி தகுதி வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையிலும் நான் துணை நிற்கிறேன். அந்த குடும்பங்களின் உணர்வுகளுக்கு மதிப்ப ளித்து பிரதமர் மோடி இந்த மரியாதையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’என குறிப் பிட்டு உள்ளார்.