ஈரோடு மாவட்டம். பவானி வட்டம் கவுந்தப்பாடி கிராம ஊராட்சிக்குச் சொந்தமான வாரச்சந்தை கூடும் இடம் உள்ளது. இந்த வாரச்சந்தையை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
சுமார் 400 க்கு மேற்பட்ட வியாபாரிகளும் 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகளும் தங்களது விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த வாரச்சந்தையில் எந்தவித அனுமதியும் இல்லாமல் ஏற்கெனவே பெருமாள் கோவில், ஓம் சக்தி கோவில், விநாயகர் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை
இதனைத் தொடர்ந்து தற்போது அய்யப்பன் கோவிலை எவ்வித அனுமதியின்றி சில தனி நபர்கள் கட்டி வருகின்றனர். (குறிப்பு – ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமல் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர்). இதை மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவில்களான பெருமாள் கோவில், ஓம் சக்தி கோவில்களை அகற்றுவதோடு, விநாயகர் கோவில்கள், தற்போது கட்டப்பட்டு வருகின்ற அய்யப்பன் கோயிலையும் தடுத்து நிறுத்திட ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.