ராய்ப்பூர்,ஏப். 20– சத்தீஸ்கரின் கொண் டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக பிரமுகர் தனது காரை மோதி காங்கிரஸ் தலைவரை கொலை செய்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் டோக்ரி குடா பகுதியில் விபத்து நடை பெற்ற தாகவும், விபத்து தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், சத்தீஸ்கரில் கொண்டகான் மாவட்டத்தில் காங்கிரஸ் இளைஞரணி தலைவராகவும், முல்முலா கிராம பஞ்சாயத்தின் தலைவராகவும் இருந்தவர் ஹேமந்த் போயர் (30). இவரும் இவரது உறவினர் பெண் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் உள்ளூர் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது. பாஜக பிரமுகரான புரேந்திர கவுஷிக் தனது காரை இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளார்.
காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பலனின்றி போயர் இறந்தார், உறவினரான பெண் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறு கூறினர்.