கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டை தடுக்க ‘ரோஹித் வேமுலா’ சட்டம் கருநாடக முதலமைச்சருக்கு ராகுல்காந்தி கடிதம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஏப்.19 கருநாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகு பாட்டைத் தடுக்க ‘ரோஹித் வேமுலா’ என்ற பெயரில் சட்ட மியற்றக் கோரி, மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தாழ்த்தப்பட்ட சமூக மாணவரான ரோஹித் வேமுலா, கடந்த 2016-இல் ஜாதிய ரீதியிலான பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்டார். அந்த காலகட்டத்தில் இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டை தடுக்க ‘ரோஹித் வேமுலா’ பெயரில் சட்டம் இயற்றப்படும் என கடந்த மக்களவைத் தோ்தலையொட்டி காங்கிரஸ் வாக்குறுதி அளித்தி ருந்தது. இந்நிலையில், கருநாடகத்தில் இச்சட்டத்தை இயற்றக் கோரி, முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், சட்டமேதை பி.ஆா்.அம் பேத்கா் தனது வாழ்க்கையில் எதிர் கொண்ட ஜாதிய பாகுபாட்டை ராகுல் சுட்டிக் காட்டியுள்ளார்.

மாட்டு வண்டியில் நீண்ட பயணம் மேற்கொண்ட நேரத்தில், தங்களுக்கு யாரும் தண்ணீா் தராதது குறித்தும், பள்ளி வகுப்பறையில் ஒரு மூலையில் தனியாக அமா்ந்தது குறித்தும் அம்பேத்கா் தெரிவித்த கருத்துகளை கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ‘அம்பேத்கா் எதிர்கொண்ட விஷயங்கள் அவமானகரமானவை. இந்தியாவில் எந்தக் குழந்தைக்கும் இது நேரக் கூடாது. நமது கல்வி அமைப்புமுறையில் தாழ்த்தப் பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத் தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்த கோடிக்கணக்கான மாணவா்கள், இன்றளவும் ஜாதிய பாகுபாட்டை எதிர்கொள்வது வெட்கக்கேடானது. இப்பாகுபாடு, ரோஹித் வேமுலா, பாயல் தாட்வி, தா்ஷன் சோலங்கி போன்ற திறமையான இளைஞா்களின் உயிரை பறித்துள் ளது. இது ஏற்றுக் கொள்ள முடியா தது. இந்த அநீதிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரமிது’ என்று கடிதத் தில் ராகுல் தெரிவித்துள்ளார்.

கருநாடக முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் மற்றும் நாடாளுமன்றத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்த மாணவா்கள்- ஆசிரியா்கள் உடனான தனது சந்திப்பு தொடா்பான ஒளிப்படத்தையும் எக்ஸ் வலைதளத்தில் அவா் பகிர்ந்துள்ளார்.

‘கல்வியால் மட்டுமே விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளிக்க முடியும்; ஜாதிய அமைப்புமுறையை தகா்க்க முடியும் என்ற வழியை அம்பேத்கா் நமக்கு காட்டியுள்ளார். நாட்டில் இனி எந்தக் குழந்தையும் ஜாதிய பாகுபாட்டை எதிர் கொள்ளக் கூடாது’ என்று தனது பதிவில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *