கோடையில் மின்சாரம் தேவை அதிகரிப்பு! தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மின்வாரிய அதிகாரிகள் தகவல்

viduthalai
2 Min Read

சென்னை, ஏப்.16- கோடை காலத்தில் தடை யில்லா மின் சார சேவையை வழங்க தமிழ் நாடு மின்சார வாரியம் தயாராக இருப்பதாக அதி காரிகள் தெரிவித்துள்ள னர்.

மின்சாரம் உற்பத்தி

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வடசென்னை அனல்மின் நிலையம்-1 மற்றும் 2, தூத்துக்குடி அனல் மின் நிலையம், மேட்டூர் அனல் மின் நிலையங்கள் சுமார் 4 ஆயிரத்து 320 மெகாவாட் மின் உற்பத்தி நிறுவு திறன்களை பெற்றுள்ளன. இதன்மூலம், நாள்தோறும் சுமார் 3 ஆயிரம் மெகாவாட் வரையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், 4 எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் 516 மெகா வாட் மின் நிறுவு திறனுடன் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம், சுமார் 100 மெகா வாட் வரையில் நாள்தோறும் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது. இதுதவிர, நீரேற்று மின் நிலையங்கள் 2 ஆயிரத்து 320 மெகாவாட் நிறுவ னங்கள் இயங்குகின்றன. இதன் மூலம் நாள்தோறும் சுமார் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றை தவிர, காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம், நிலக்கரி என அரசு மற்றும் தனியார் ஆகியவற்றிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு மின்சாரம் கொள்முதல் செய்து வருகிறது. இதன்மூலம், தமிழ்நாட்டின் அன்றாட மின்சார தேவை 16 ஆயிரம் மெகாவாட் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

மின்சாரத் தேவை

கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெப்பத்தின் காரண மாக, ஒவ்வொரு ஆண்டும் மின்சார தேவை அதிகரித்து வருகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி, கோடை கால உச்சபட்சமாக மின் தேவையாக 17 ஆயிரத்து 563 மெகாவாட் இருந்தது. அதே போல், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி, உச்சபட்ச மின் தேவையாக 19 ஆயிரத்து 387 மெகாவாட் இருந்தது.

கடந்த ஆண்டு, மே மாதம் 2ஆம் தேதி உச்சபட்ச மின் தேவை, 20 ஆயிரத்து 830 மெகா வாட்டாக இருந்தது. கூடுதல் தேவைக்காக, தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு மின்சார தேவை பூர்த்தி செய்யப்பட் டது. இந்த நிலையில், நடப்பாண்டு சுமார் 22 ஆயிரம் மெகாவாட் வரையில் மின்சார தேவை இருக்கும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கணித் துள்ளது. இதன்காரணமாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு கூடுதல் தேவைக்காக 6 ஆயிரம் மெகாவாட் கூடுதல் மின்சாரத்தை கோடை கால  தேவைக்காக வெளிச்சந்தையில் மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதியின்படி தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்துள்ளது.

துரித நடவடிக்கை

கோடை சுட்டெரிக்க தொடங்கி உள்ளதால் தமிழ்நாட்டின் மின்சார தேவை நாள்தோறும் 19 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வருகிறது. இது இம்மாத இறுதியில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது. இருப்பினும், தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்தின் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, அதிக தேவை (பீக் அவர்ஸ்ஸ்) நேரங்களில் தடையில்லாத மின்சார சேவையை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். சில இடங்களில், எதிர்பாராதவிதமாக மின்தடை ஏற்பட்டால், அவற்றை உடனுக்குடன் சரிசெய்யவும் மின்சார வாரிய ஊழியர்களுக்கு, மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *