அலகாபாத், ஏப்.15 பா.ஜ.க.வின் போட்டோஷாப் வதந்தியை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்ற வழக்குரைஞருக்கு சிறைத்தண்டன விதித்தது உயர்நீதிமன்றம்.
டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் அசோக் பாண்டேராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் அவரது குடியுரிமையை ரத்து செய்யக் கோரி 2024 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார். அவரது புகார் மனுவை ஏற்க, தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார்.
இதனை அடுத்து அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, வழக்கின் சான்றுகளாக பாஜக அமைப்பினர் நடத்தும் வாட்ஸ் அப் போட்டோஷாப் செய்து வெளியிட்ட போலியான சில சான்றுகளை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அசோக் பாண்டே சமர்பித்திருந்தார்
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீத்பதிகள் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவர் போலியான சான்றுகளை வழக்கின் சாட்சியாக கொடுத்ததற்காக அசோக் பாண்டேவிற்கு ஆறு மாத சிறைத் தண்டனையும், மூன்று ஆண்டு களுக்கு வழக்குரைஞராகப் பணியாற்ற தடையும் விதித்தது.