காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.