கொல்கத்தா, ஏப். 11- வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில் வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா அறிவித்துள்ளார்.
தலைநகர் கொல்கத்தாவில் 9.4.2025 அன்று நடைபெற்ற ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சிறுபான்மையின மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன். வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். நம்பிக்கையுடன் இருங்கள். மேற்கு வங்கத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது. ஆனால், அதை செய்ய விட மாட்டோம். வக்பு திருத்த சட்டத்தை இங்கு அமல்படுத்த மாட்டோம்.
இவ்வாறு முதலமைச்சர் மம்தா கூறியுள்ளார்.
வேளாண் கல்லூரி மாணவிகள் சாா்பில் கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம்
மேல்பட்டி, ஏப். 11- மேல்பட்டி பாலாறு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் மாதனூா் ஒன்றிய கிராமங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனா்.
அதன்படி பனங்காட்டேரி கிராமத்தில் வனச்சரக அலுவலா் பாபு தலைமையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நெகிழி பொருள்கள் பயன்படுத்துவதை தவிா்ப்பது, வன விலங்குகளை பாதுகாப்பது, மரக்கன்றுகள் நடுவது, காட்டுத் தீயைத் தடுப்பது ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பாலாறு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செ.ஹரிணி, பி.ஷி.ஜெய்சிறீ, செ.ஜாஸ்மின் பாத்திமா, த.ஜீவிதா, மு.கனிகா, ரா.கவிதா, பு.ரா.காவ்யகவி, சி.ராவண்யா, சோ.லாவண்யா, ர.சுருதி லேகா ஆகியோா் கலந்து கொண்டனா்.