சேலம், ஏப். 11- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 06/04/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு அம்மாபேட்டையில், மாவட்டத் தலைவர் வீரமணி ராஜுவின் தலைமையில், அவரின் மகிழ் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்டக் காப்பாளர் கி ஜவகர், பொதுக்குழு உறுப்பினர் சி. வேலாயுதம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ச சுரேஷ் குமார், பகுத்தறிவாளர் கழக மாநகர செயலாளர் வழக்குரைஞர் கோ கல்பனா, சூரமங்கலம் பகுதி தலைவர் பழ பரமசிவம், பெரியார் பெருந்தொண்டர் பேங்க் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சி பூபதி வரவேற்புரையாற்றினார்.
தோழர்களின் கருத்துரைகளுக்கு பின்னர், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.
தீர்மானங்கள்:
அம்மாபேட்டை பகுதியில் நஞ்சம்பட்டி கிளைக் கழகம், அம்மாபேட்டை பகுதி தலைவர் சு இமயவரம்பன், செயலாளர் கே குமாரதாசன் ஆகியோரின் பொறுப்பில் அமைப்பது.
அயோத்தியாபட்டணம் ஒன்றிய கழகம் ராஜாவின் பொறுப்பிலும், உடையாபட்டி கிளைக் கழகம் துரை சக்திவேல் பொறுப்பிலும் அமைப்பது.
தாதகாபட்டி பகுதியில் இராவண பூபதி, இரா சீனிவாசன் பொறுப்பில் கிளைக் கழகம் அமைப்பது.
அஸ்தம்பட்டி பகுதியில் கன்னங்குறிச்சி கிளைக் கழகம் வழக்குரைஞர் ச சுரேஷ் குமார் பொறுப்பில் அமைப்பது.
இளம்பிள்ளை கிளைக் கழகம் பொதுக்குழு உறுப்பினர் சி வேலாயுதம், பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தராஜ், வி. காயத்ரி ஆகியோரின் பொறுப்பில் அமைப்பது.
கீரைப்பட்டி கிளைக் கழகம் பொறியாளர் தை.சிவகுமார் பொறுப்பில் உருவாக்குவது
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கலந்து கொண்ட தோழர்கள்:
ஊமை ஜெயராமன் மாநில ஒருங்கிணைப்பாளர், கி.ஜவகர் மாவட்டக் காப்பாளர், வீரமணி ராஜு மாவட்டத் தலைவர், சி. பூபதி, மாவட்டச் செயலாளர், இராவண பூபதி மாநகரச் செயலாளர், சி.வேலாயுதம் பொதுக்குழு உறுப்பினர், வழக்கறிஞர் சுரேஷ் குமார் ப. க. மாவட்டச் செயலாளர், வழக்கறிஞர் கோ கல்பனா ப. க. மாநகரச் செயலாளர், வீ. வாசந்தி, பெரியார் பெருந்தொண்டர் பேங்க் ராஜி, அம்மாபேட்டை பகுதி தலைவர் குமாரதாசன், செயலாளர் இமயவரம்பன், சூரமங்கலம் பகுதி தலைவர் பழ பரமசிவம், பி. காயத்ரி, தாதகாப்பட்டி பகுதி செயலாளர் ஆர் சீனிவாசன், கு. அம்பேத்கர், கா. சிறீதர், ஏ. ராஜா, சிலம்பரசன், மோகன்ராஜ், அஜித் குமார், ஏ. சிலம்பரசன், ரா. வெற்றிவேல், ஆர்.ரமேஷ், கூ செல்வம், க. காரல் மொழி, உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
உடையாபட்டி துரை சக்திவேல் நன்றி கூற 08:30 மணியளவில் கலந்துரையாடல் கூட்டம் இனிதே முடிவடைந்தது.