கப்பியறை, ஏப்.10- கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சி செல்லங்கோணம் ஜோசப் நகர் பகுதியில் கழக திண்ணைப் பிரச்சாரம் மற்றும் தோழர்கள் இல்லம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், கலைப் பிரியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
திராவிடர்கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்தார்.
தந்தை பெரியாருடைய கொள்கையை உலகமயமாக்க ஓயாது உழைக்கும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலிய நாட்டில் பெரியாருடைய கருத்துக்களை பரப்பியதோடு உலகம் முழுக்க தந்தை பெரியாருடைய கருத்துக்களை பரப்பும் தமிழர் தலைவரின் தூய தொண்டுகளை அப்பகுதி கிராம மக்கள் பாராட்டினார்கள்.
பொது மக்களுக்கு தந்தை பெரியாருடைய நூல்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய நூல்கள் வழங்கப்பட்டன.