புதுடில்லி, ஏப்.9 பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
டிரம்ப், மாயையின் மூடியை உடைத்து விட்டார் – – யதார்த்தம் திருப்பித் தாக்குகிறது. பிரதமர் மோடியை எங்குமே காணவில்லை. பங்கு சந்தை எழுச்சி காணவில்லையே. இந்தியா, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து இந்தியர்களுக்கும் பலன் அளிக்கக்கூடிய மீண்டு எழக்கூடிய உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை தவிர, நமக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 769 நீதிபதிகளில் 95 பேர் மட்டுமே சொத்து விவரங்களை வெளியிட்டனர்
புதுடில்லி, ஏப்.9 சென்னை உள்பட 25 உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 769 நீதிபதி களில் 95 பேர் மட்டுமே தங்களது சொத்து விவரங்களை வெளியிட் டனர்.
சொத்து விவரம்
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாகக் கண்டுபிடிக்கப் பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதாவது, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் பணியாற்றி வரும் நீதிபதிகள் தாங்களாக முன்வந்து தங்களுடைய சொத்து விவரங்களை தெரிவிக்கவேண் டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கூட்டங்களில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதி மன்றங்களில் நீதிபதிகள் தங்களு டைய சொத்து விவரங்களை தங்களுடைய நீதிமன்ற இணையதளங்களில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்தனர். இதன்படி உச்சநீதிமன்றத்தில் 33 நீதிபதிகள் பணியில் உள்ள நிலையில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உள்பட 30 பேர் தங்களுடைய சொத்து விவரங்களை வெளியிட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 769 நீதிபதிகள் பணியில் உள்ளனர். இதில், சென்னை, கேரளா, டில்லி, சத்தீஷ்கார், இமாசலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமே சொத்து விவரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். கேரள உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் 44 நீதிபதி களில் 41 பேர் தங்களுடைய சொத்து விவரங்களை தெரிவித்திருக்கிறார்கள்.
இதபோல, பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் 54 நீதிபதிகளில் 30 பேரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் 65 நீதிபதி களில் 5 பேரும், டில்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் 38 நீதிபதிகளில் 7 பேரும், இமாசலப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் பணி யாற்றும் 12 நீதிபதிகளில் 11 பேரும், சத் தீஷ்கார் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் 16 நீதிபதிகளில் ஒருவரும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
95 பேர் மட்டும்
உயர்நீதிமன்றங்களில் 769 நீதிபதிகள் பணி யில் உள்ள நிலையில் 95 பேர் மட்டுமே சொத்து விவரங்களை அறிவித்திருக்கிறார்கள். இது 12.35 சதவீதம் ஆக உள்ளது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் தங்களுடைய சொத்து விவரங்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு
30 நாள்களில் செயற்கை உறுப்புகள்
அமைச்சா் கீதாஜீவன்
சென்னை, ஏப்.9 மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் நவீன செயற்கை அவயவங்கள் வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிர்உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் பேரவையில் தெரிவித்தார்..
பாமக உறுப்பினா் இரா.அருள், சட்டப் பேரவையில் 7.4.2025 அன்று சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மானம் ஒன்றை கொண்டுவந்தார். அப்போது பேசிய அவா், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் வழங்கப்படும் செயற்கை கை, கால் போன்ற அவயவங்களை விரைந்து வழங்க வேண்டும் என்றார்.அதற்கு பதிலளித்து அமைச்சா் கீதாஜீவன் பேசியதாவது:
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவீன செயற்கை அவயவம் வேண்டி விண்ணப்பிப்பவா்களுக்கு 30 நாள்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கேற்ப அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா்களால் விண்ணப்பங்களுக்கு இணையதளம் வாயிலாக உடனுக்குடன் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத் துறையால் தோ்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் முழங்கால் மற்றும் முழங்கை முட்டியின் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் பொருத்தப்படும் செயற்கை கால்கள், கைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த உபகரணங்கள் ரூ.60,000 முதல் ரூ.1.75 லட்சம் வரை மதிப்புடையவை. தமிழ்நாடு முழுவதும் 2022-2023 நிதியாண்டி லிருந்து கடந்த மாா்ச் 23 வரையிலான காலகட்டம் வரை ரூ.33.74 கோடி மதிப்பீட்டிலான செயற்கை அவயவங்கள் 3,969 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆலிம்கோ நிறுவனம், ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை, முக்தி, ஃப்ரீடம் அறக்கட்டளை உள்ளிட்ட நிறுவனங்கள் வாயிலாகவும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சா் கீதாஜீவன்.