புதுடில்லி, ஏப்.8 உத் தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து போய்விட்டதாக அம்மாநி லத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை உச்சநீதிமன்றம் மிக கடுமையாக விமர் சித்துள்ளது புல்டோசர் மூலம் வீடுகளை இடித்த வழக்கிலும் உ.பி. அரசு மீது உச்சநீதிமன்றம் கடு மையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது.
இந்த நிலையில் அப்பாவிகளின் மீதான சிவில் வழக்குகளை குற்றவியல் வழக்குகளாக பதிவு செய்யப்பட்டது குறித்த வழக்கை விசாரித்த ‘‘உச்சநீதிமன்றம் உத்தரப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அரங்கேறிக்கொண்டே வருகிறது. அதில் கவனம் செலுத்தாமல் அப்பாவிகளின் மீது நடவடிக்கை எடுப்பது, சிறுபான்மையினரின் வீடுகளை இடிப்பது என தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்வது அங்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டதைக் காட்டுகிறது’’ என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு கடுமையான சொற்களைப் பயன்படுத்தியது. புல் டோசர்கள் மூலம் வீடுகளை இடிப்பதற்கு எதிராக உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் மிக கடுமையான கண் டனத்தைத் தெரிவித்திருந் ததும் குறிப்பிடத்தக்கது.