தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர்
ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்!
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதுடில்லி, ஏப்.8 தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கைகளை ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு கள் நேர்மையானதாக இல்லை; அரசமைப்புச் சட்டத்தின நோக்கத்துக்கு விரோதமாக இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு உள்ளிட்டவற்றை முன்வைத்து இந்த வழக்குகள் தொட ரப்பட்டன.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணை யின் போது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது; கண்டனங்கள் தெரிவித்தது.
மேலும், மாநில சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினால், மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறை வேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் போது, குடியரசுத் தலை வருக்கு அனுப்ப அதிகாரம் இருக்கி றதா?
மாநில அரசின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட மசோதாக்களை மட்டுமே அனுப்ப முடியுமா? அனைத்து மசோ தாக்களையும் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க இயலுமா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி இருந்தது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில் இன்று (8.4.2024) ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை.
– ஆளுநர் ஆர்.என்.ரவியின் நட வடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாக இருக்கின்றன.
– தமிழ்நாடு அரசின் 10 மசோ தாக்களை நிறுத்தி வைத்து குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம்.
– தமிழ்நாடு அரசின் 10 மசோ தாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன
– தமிழ்நாடு அரசு 2 ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.
– தமிழ்நாடு அரசின் மசோதாக்க ளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் தர வேண்டும்.
– ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரிவின் படி சுயேச்சையாக செயல்பட அதி காரம் உள்ளதா? அல்லது மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
-மாநில அரசின் ஆலோசனைப் படியே ஆளுநர் செயல்பட வேண்டும்
– தமிழ்நாடு அரசின் மசோதாக்கள் சிலவற்றுக்கு 3 வாரத்திலும் மற்ற வற்றுக்கு ஒரு மாதத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும்.
– ஆளுநர் ரவிக்கு காலக்கெடு நிர்ணயிக்கவே முடியாது; நிர்ப்பந்திக்க முடியாது என்ற ஒன்றிய அரசின் வாதம் நிரகாரிப்பு.
– இவ்வாறு நீதிபதிகள் அமர்வு தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.