தமிழ்நாடு சட்டமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க.விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்.