சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் கூட்டணியாம். சொல்லுகிறார் எடப்பாடி பழனிசாமி.
கூட்டணி என்பது சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அங்கேயே இருக்கப் போகின்றனவா? தவிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப, கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
கூட்டணி வேறு; கொள்கை வேறு. எங்கள் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று டில்லி விமான நிலையத்தில், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னையில்…
சென்னையில் விரைவில் 625 மின்சார பேருந்துகள் இயங்கும்.
காவல்துறையினருக்கு…
கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் போக்குவரத்துக் காவல்துறையினருக்கு குளிரூட்டும் கண்ணாடிகளை காவல் ஆணையர் வழங்கினார்.
கிரிக்கெட் போட்டி
நாளை (28.3.2025) சென்னையில் நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டிக்கு கள்ள டிக்கெட் ரூ.ஒரு லட்சம் வரை போகுமாம்.
இன்று முதல்…
புதிய ஒப்பந்த விதிமுறைகளை நீக்கக் கோரி எரிவாயு டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்.
உ.பி. முதலமைச்சரின் ‘அருள் வாக்கு’
நூறு இந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் மிகவும் பாதுகாப்புடன் இருக்க முடியும். ஆனால், நூறு முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் 50 இந்துக்கள் பாதுகாப்புடன் இருக்க முடிகிறதா, இல்லை என்று கசிந்து உருகி கூறியுள்ளார் உ.பி. சாமியார் முதலமைச்சர்.
புதிய காவல் நிலையங்கள்!
தமிழ்நாட்டில் புதிதாக 72 காவல் நிலையங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
ஆரம்ப சுகாதார நிலையம்
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க முப்பது ஆயிரம் மக்கள் தொகை இருக்கவேண்டும். மலை கிராமங்கள் என்றால் 20,000 மக்கள் தொகை இருக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
ஒன்றிய அரசு தகவல்
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மாநிலங்களே சட்டம் இயற்றலாம், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்.
வெப்பம்
தமிழ்நாட்டில் அடுத்த அய்ந்து நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். 15 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு.
செய்திச் சிதறல்கள் நழுவலா, மழுப்பலா?
Leave a Comment