புதுடில்லி, ஜூலை 9 ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உட னான தனது மோதலை மன்னிக்கவும் மறக்கவும் தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறினார்.
ராஜஸ்தானில் கடந்த 2018-இல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது முதல், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக் கும் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் இருந்து வருகிறது. கடந்த 2020இ-ல் முதலமைச்சருக்கு எதிராக சச்சின் போர்க்கொடி தூக்கி யதை தொடர்ந்து துணை முதல மைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப் பட்டார்.
இந்நிலையில் சச்சின் பைலட் நேற்று (8.7.2023) செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் அசோக் கெலாட் உடனான மோதலை மறக் கவும் மன்னிக்கவும் தயாராக இருக் கிறேன். கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சமீபத்தில் சந்தித்தேன்.அவரது வார்த்தைகள் அறிவுரைகளை போலவே இருந்தன. அவர் எப்போதும் விரும்பத்தகாத எந்த வார்த்தையையும் பயன்படுத் துவதை தவிர்த்தார்.
ராஜஸ்தானில் வரவிருக்கும் தேர்தலில் ஒன்றாக சேர்ந்து போரிட தயாராக உள்ளேன். நான் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அனைவரையும் அரவணைத்துச் சென்றேன். இப்போது, முதலமைச்சர் கெலாட்டும் அனைவரையும் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். கூட்டு முயற்சியால் மட்டுமே தேர்தலில் வெற்றி முடியும். தேர்தல் வெற்றிக்கு தங்கள் தனிப்பட்ட முயற்சியே போதும் என்று யாரும் கூறிவிட முடியாது.வெற்றி வாய்ப்பே வேட்பாளர் தேர்வுக்கான ஒரே அளவு கோலாக இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப் பளிக்க வேண்டும். இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.