பன்னாட்டு விண்வெளி மய்யத்தில் 286 நாள்கள் தங்கிய பிறகு சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில்மோர் உள்ளிட்ட நான்கு பேர் 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு, அமெரிக்காவின் புளோரிடா கடலில் பாதுகாப்பாக நேற்று (19.3.2025) அதிகாலை இறங்கினர். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர். பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்தன.