மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டுமென இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் களின் புனித புத்தகம் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தகவல் பரவியதால், இருதரப்புக்கும் மோதல் மூண்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.