திருமங்கலத்தில் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு

Viduthalai
1 Min Read

மதுரை புறநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திருமங்கலம், மார்ச் 18- 16.3.2025 அன்று காலை 11 மணிக்கு மதுரைபுறநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்டச் செயலாளர் பா.முத்துக்கருப்பன் இல்லத்தில் மாவட்டத்தலைவர் த.ம.எரிமலை தலைமையில் நடைபெற்றது.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் பங்கேற்று தந்தை பெரியாரை உலகயமயமாக்கும் பெரும் பணியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழர் தலைவரது அருந் தொண் டிணையும், கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் ஆற்றவேண்டிய கட மைகளையும் விடுதலை, உண்மை உள்ளிட்ட இனமான ஏடுகள் படிக்கவும், பரப்பவும் வேண்டிய அவசியத்தையும் விளக்கி தொடக்க வுரையாற்றினார்.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், மாவட்டச் செயலாளர் பா.முத்துக் கருப்பன், பொதுக்குழு உறுப்பினர் விக்ரமங்கலம் ரோ.கணேசன், மாவட்ட துணைத் தலைவர் அழ.சிங்கராசு, மாவட்ட மகளிரணி தலைவர் பெ.பாக்கியலட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் இரா.கலைச்செல்வி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் பி.காவேரி, மேலூர் கழக செயலாளர் பெரியசாமி, பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் செயராமன், நூலகர் விசயகுமார் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஏ.பி.சாமிநாதன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். மாவட்ட ப.க.தலைவர் வீரா தங்கதுரை விடுதலை, உண்மைக்கு சந்தா வழங்கினார்.
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் த.ம.எரிமலை-மஞ்சுளா இணையரின் மகன் இணையேற்பு விழாவை நடத்தி வைத்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவிக் கப்பட்டது.

சிதம்பரத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குவது எனவும், ஹிந்தி திணிப்பு, சமஸ் கிருத திணிப்பை கண்டித்து பரப்புரை பெரும்பயணம் மேற்கொண்டு திருமங்கலம் வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் எழுச்சிமிகு பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நகரசெயலாளர் மு.சண்முக சுந்தரம் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *