புதுடில்லி, மார்ச் 18 இந்தியாவின் கருத்து மீது ஆளும் பாஜக தாக்குதல் நடத்துகிறது என மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதளத்தில் 16.3.2025 அன்று ஒரு காட்சிப் பதிவு வெளியிடப்பட்டது. அதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “இந்தியாவின் கருத்து இன்று தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
அது பாஜகவின் சித்தாந்தத்தால் தாக்கப்படுகிறது. இந்தியாவின் செல்வம் கோடிக்கணக்கான இந்தியர்களிடமிருந்து பறிக் கப்பட்டு, பிரதமருக்கும் பாஜக வுக்கும் நெருக்கமான ஒரு சில தொழிலதிபர்களிடம் ஒப்படைக் கப்படுகிறது.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்ந்து வருகிறது. இதை எதிர்த்து தான் போராடுகிறோம். இந்த சண்டை இரு வேறு சித்தாந்தங்களுக்கு இடையிலானது. இரு அரசியல் அமைப்புகளுக்கு இடையிலானது அல்ல. இந்தியாவின் கருத்தை பாதுகாக்கவே இந்த போராட்டம் நடைபெறுகிறது” என்றார்.