வாக்காளர் பிரச்சினை குறித்த ஆலோசனைகளை ஏப்ரல் 30-க்குள் தெரிவிக்கலாம்! தேர்தல் ஆணையம் அழைப்பு

1 Min Read

புதுடில்லி, மார்ச் 17- வாக்காளர் பிரச்சினை குறித்த ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக இருந்தது தெரியவந்தது. இதை சுட்டிக்காட்டிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, போலி வாக்காளர்கள் உள்ளதாக குற்றம்சாட்டினார்.

ஒரே எண்

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2 பேருக்கு ஒரே எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், அவர்களை போலி வாக்காளர்களாக கருத முடியாது. அவர்களால் 2 இடங்களிலும் வாக்களிக்க முடியாது. தங்களுடைய வாக்குப்பதிவு மய்யத்தில் மட்டுமே வாக்களிக்க முடியும் எனினும், இதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டிருந்தது.

ஆலோசனை

இந்நிலையில், வரும் 18ஆம் தேதி ஒன்றிய உள்துறை செயலாளர், சட்டத் துறை செயலாளர் மற்றும் ஆதார் ஆணைய தலைமைச் செயல் அதிகாரி ஆகியோருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஒரே எண் 2 வாக்காளர்களுக்கு ஒதுக்கப்படுவதைத் தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதை கட்டாயமாக்குவது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதுதவிர, வாக்காளர் பதிவு அதிகாரிகள் (இஆர்ஓ), மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (டிஇஓ) அல்லது மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் (சிஇஓ) நிலையிலான, தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து, அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், பிரச்சினைக்குரிய வாக்காளர் அடையாள அட்டைகள் கடந்த 2008 மற்றும் 2013ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வநியோகிக்கப்பட்டதாகவும் அப்போது பாஜக ஆட்சியில் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *