பெத்சி பொன்மலர் மறைவு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை

Viduthalai
2 Min Read

மேலமெஞ்ஞானபுரம், மார்ச் 16- தென்காசி மாவட்டம் மேல மெஞ்ஞானபுரம் பகுத்தறி வாளர் கழக குடும்பத்தை சார்ந்த டி.எஸ். கமல் ரெஜினால்டுவின் வாழ்விணையர் பெத்சி பொன்மலர் (வயது-41) கடந்த 11-03-2025 அன்று பகல் 12 மணி அளவில் உடல்நலக்குறைவால் மறைவுற்றார். அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரிக்கு கொடையாக வழங்கப்பட்டது.

மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள்

இறுதி மரியாதை
இறுதி நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கழகத் தலைவர் வழக்கு ரைஞர். த.வீரன், செயலா ளர் கை.சண்முகம், துணைச் செயலாளர் அ.சவுந்திரபாண்டியன், காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை, பொதுக் குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன், சீ.தங்கத் துரை, கிளைத்தலைவர் க.தங்கராஜ், செயலாளர் கி.சேகர், அமைப்பாளர் செ.முருகன், மருத்து வர்கள் தமிழரசன், கவுதமி தமிழரசன், அன்பரசன், பொன்மலர் மற்றும் கழக குடும்பத்தினர் பில்லி கிரகாம், ஆல்பர்ட், மணிவண்ணன், பொன் னையா, சுரேஷ்பாபு, தனசிங், ஜெயசிங், ஜோன்ஸ், அமுதன் கீழப்பாவூர் நகர செயலா ளர் சிவப்பிரகாசம், அன்பழகன், இரா.உமா, சிவா, உள்பட கழக குடும்பத்தினர் பங் கேற்றனர்.
மேலும், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெய பாலன், மேனாள் செயலாளர் வழக்குரைஞர் சிவபத்மநாதன், கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் சீனித்துரை, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் காவேரி சீனித்துரை, மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பேராசிரியர் சாக்ரட்டீஸ், மேலமெஞ்ஞானபுரம் தி.மு.க.கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் மறைந்த பெத்சி பொன்மலர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பெத்சி பொன்மலர் அவரது இணையர் கமல் ரெஜினால்டு இரு வரும் ஜாதி மறுப்பு மற்றும் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள். தந்தை பெரியாரின் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள். அவர்களுக்கு கபிலன் (வயது-17), பிராபகரன் (வயது-13),ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
மறைந்த பெத்சி பொன்மலர் தென்காசி மாவட்ட கழக காப் பாளர் சீ.டேவிட் செல்லத்துரையின் இணையர் சாந்தி அவர்களின் சகோதரி மகள் ஆவார். இவரது தந்தையின் உடலும் மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டது குறிப்பிட தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *