மருத்துவத் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவத் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு பி.எஸ்சி., அல்லது எம்.எஸ்சி நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. நர்சிங் மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற எஸ்.சி., எஸ்.டி. வகுப்பைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி முடித்த தகுதியான நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலமாக அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர தாட்கோவின் www.tahdco.com என்னும் இணைய தள முகவரியில் பதிவு செய்து பயன் பெறலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
ரூ.257 கோடி தள்ளுபடி
சத்துணவு மய்ய ஊழியர்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி – தமிழ்நாடு அரசு உத்தரவு.

ராணுவத்தில் சேர வாய்ப்பு

தகுதி வாய்ந்த இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
திருச்சி, மார்ச் 14- இந்திய ராணுவத்தில்பல்வேறு பிரிவுகளில் ஆட்சேர்ப்புக்கான பதிவு ஆன்லைனில் திறக்கப்பட்டுள்ளது. இதன் படி விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அக்னிவீர் பொதுப்பணி, தொழில்நுட்ப பிரிவு, அலுவலக உதவியாளர்/ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கு10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 08-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகிய பிரிவுகளில் ஆன்லைனில் பதிவு செய்ய www.joinindianarmy.nic.in. ராணுவ இணையதளத்தை அணுக வேண்டும் என திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *