மும்பை, மார்ச் 13- ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்துடன் புதிய 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சக்தி காந்ததாஸ் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, புதிய கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா என்பவர் பதவியேற்றார். இந்த நிலையில், புதிய கவர்னர் கையெழுத்திட்ட 50 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்த நிலையில், ரெப்போ வட்டி விகிதமும் குறைக்கப்பட்டது.
இப்போது, புதிய கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா கையெழுத்துடன் புதிய 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த புதிய 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.