உரத்தநாடு, மார்ச் 12- உரத்தநாடு தெற்கு ஒன்றிய மகளிர் அணி சார்பில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா உரத்தநாடு தொழிலதிபர் கே.எஸ்.பி.ஆனந்தன் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மகளிர் அணி தோழியர் கட்டட எழில்கலை பொறி யாளர் மாநல். ப.முகில் வரவேற்று உரையாற்றினார். நிகழ்விற்கு தஞ்சை மாவட்ட மகளிர் அணி தலைவர் அ.கலைச்செல்வி தலைமையேற்று சிறப்பித்தார்.
ஒன்றிய மகளிர் அணி தலைவர் வடசேரி இ.அல்லிராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தை தொடங்கி வைத்து பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் மேனாள் துணை முதல்வர் பேராசிரியர் உ.பர்வீன் உரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தெற்கு ஒன்றிய கழக தலைவர் த. ஜெகநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், மகளிர் அணி தோழியர் மேலவன்னிப்பட்டு ர.சாந்தி ஆகியோர் உரையாற்றினர்.
தந்தை பெரியாருக்கு பின் கழகத் தலைவராக அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய தொண்டு,அன்னை மணியம்மையார் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறி எழுத்தாளர் கவின்மலர் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக பெரியார் பிஞ்சு ஒக்கநாடு மேலையூர் மா.புகழினி நன்றி உரையாற்றினார்.
கூட்டத்தில் பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.ராமகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய கழக துணை தலைவர் கு.நேரு,ஒன்றிய விவசாய அணி தலைவர் மா. மதியழகன், ஒன்றிய துணை செயலாளர் கு.லெனின், மாவட்ட துணைச் செயலாளர் ரெ.சுப்ரமணியன், மாவட்ட ப.க இணைச்செயலாளர் ஆ.லெட்சுமணன், மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் க.மாரிமுத்து,தொழில் அதிபர் கே.எஸ்.பி.ஆனந்தன், வடக்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் கக்கரை கோ.ராமமூர்த்தி, ஒன்றிய கழக இளைஞரணி தலைவர் ரெ.ரஞ்சித் குமார், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் மு.செந்தில்குமார் ஒக்கநாடு மேலையூர் பொறியா ளர் ப.பாலகிருஷ்ணன், கிளைக்கழக செயலாளர் நா.வீரத் தமிழன், ச.பெரியார்மணி, மண்டலக் கோட்டை இரா.மோகன்தாஸ், அ.செந்தில்,ஒன்றிய மாணவர் கழக செயலாளர் ர.நிரஞ்சன்குமார், கக்கரைக்கோட்டை வீர. இளங் கோவன், மகளிர் அணி தோழியர்கள் புலவென்காடு ப.மலர்விழி, கண்ணை ஜெ.ராஜகுமாரி, ஒக்கநாடு மேலையூர் இரா.ஈஸ்வரி, ர.இந்திரா, தெ.வினோதா, மா.புனிதா, வீ.சிவரஞ்சனி, வி.அனுசியா, பெ.பியூலாராணி, நி.சவுந்தர்யா, கருவிழிக்காடு சு.மகேஸ்வரி கீழ வன்னிப்பட்டுசெ.வெண்ணிலா, கக்கரக்கோட்டை இ.பத்மாவதி உள்ளிட்ட மகளிர் அணி தோழி யர்கள், கல்லூரி மாணவிகள் ஏராள மானோர் நிகழ்ச்சியில் கலந்து சிறப் பித்தனர். எழுத்தாளர் கவின்மலருக்கு கே.எஸ்.பி.சந்திரா சிறப்பு செய்தார் பேராசிரியர் பர்வீனுக்கு கல்லூரி மாணவி காயத்ரி சிறப்பு செய் தார், கூட்டத்தின் தலைவர் அ.கலைச் செல்விக்கு ஒக்கநாடு மேலையூர் அனுசியா சிறப்பு செய்தார்.