புதுடில்லி, மார்ச் 4 அய்.அய்.டி. பாபா என்று தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் அபய் சிங் ஒரு அய் அய் டி- மும்பை மேனாள் மாணவர் மற்றும் மேனாள் விண்வெளி பொறியாளர். என்று கதைவிட்டுக்கொண்டு நான் உலக வாழ்க்கையைத் துறந்து சாமியாராக மாறிவிட்டேன் என்று கூறி கும்பமேளாவில் இவர் செய்த கூத்து சந்தி சிரித்தது. இதனால் சாமியார்களே இவரை அடித்து விரட்டிவிட்டனர்.
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள ரித்தி சித்தி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கஞ்சா போதையில் ஊழியர்களோடு ஓரினசேர்க்கைக்கு அழைத்து தகராறு செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அய்.அய்.டி. சாமியாரின் அறைக்கு வந்து அவரைக் கைதுசெய்தனர்.
அறையைச் சோதனையிட்ட போது அறையில் கஞ்சா இருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போலி சாமியார் நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு காவல்துறையினர் வந்து என்னைக் கைது செய்தனர். இது காமெடிக்காக என்று நான் நினைத்தேன். கும்பமேளாவில் எல்லா பாபாக்களும் கஞ்சாவை பிரசாதமாக உட்கொள்கிறார்கள். அவர்கள் அனைவரையும் கைது செய்வார்களா?’
இன்று எனது பிறந்தநாள், ஆகவே நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். இவ்வாறு அய்.அய்.டி சாமியார் கூறினார்.