ரயில்வேயின் மக்கள் விரோத செயல்- சாதாரண பெட்டிகள் குறைப்பு

1 Min Read

டில்லி,பிப்.26- ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கையையும் குறைத்து, 3ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நாடுமுழுவதும் அனைத்து நீண்ட தூர ரயில்களிலும் தூங்கும் வசதி கொண்ட சாதாரண பெட்டிகள் மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இந்த நிலையில் 3ஆம் வகுப்பு குளிர் சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ரயில் கட்டணங்கள் மூலம் ஒட்டு மொத்தமாக ரூ. 80,000 கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் 3ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் மூலம் மட்டும் ரூ.30,000 கோடி வருவாய் கிடைக்கிறது. 2019-2020ஆம் நிதியாண்டில் 3ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் மூலம் ரூ. 12,370 கோடி வருவாய் கிடைத்தது. தற்போது 3ஆம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் மூலம் ரூ.30,089 கோடி வருவாய் கிடைக்கிறது. 3ஆம் வகுப்பு குளிர் சாதன பெட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாயை ரூ.37,000 கோடியாக உயர்த்த ரயில்வே துறை முடிவு எடுத்துள்ளது.

வருவாயை பெருக்க ரயில்வே நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கையால் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படும். அதிக கட்டணம் வசூலிக்கப்படும் குளிர் சாதன பெட்டிகளில் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலைக்கு பயணிகள் தள்ளப்படுவர். இதனால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு ரயில் பயணம் என்பது எட்டாக்கனியாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *