எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

1 Min Read

அகமதாபாத்தில் ஏப்ரல் மாதம் 8, 9ஆம் தேதிகளில் நடக்கிறது

அகமதாபாத், பிப்.25 குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏப்ரல் 8,9-ஆம் தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடை பெறும் என்று நேற்று (23.2.2025) தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயா் அதிகாரம் மிக்க கூட்டம் இது என்பதால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வாக உள்ளது. இது தொடா்பாக அக்கட் சியின் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

முக்கிய பிரச்சினைக்கு தீர்வு

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கட்சி தொடா்பான முடிவுகளை எடுக்கும் நிகழ்வாக மட்டும் இருக்காது. சாமானிய மக்கள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு என்ன தீா்வுகாண்பது, தேசம் குறித்த தீவிரமான மாற்று சிந்தனையை முன்னெடுப்பதாக இருக்கும். ஒன்றிய பாஜக தொடா்ந்து மக்கள் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. அரச மைப்புச் சட்டத்தின்மீது நாள்தோறும் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. இதற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளை இக் கூட்டம் ஒருங்கிணைக்கும். காங்கிரஸ் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் கூட்டத் தில் விவாதிக்கப்படும்.

நிர்வாகிகள் கூட்டம்

காங்கிரஸ் செயற்குழு கூட் டத்துடன், தேசிய அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டமும் நடைபெறவுள்ளது. இரு கூட்டங் களுக்கும் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே தலைமை வகிப்பார். கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், தேசிய பொறுப்பாளா்கள், மூத்த தலைவா்கள் மற்றும் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
1924-ஆம் ஆண்டு காந்தியார் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையிலும் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *