திண்டிவனம், பிப். 24- திண்டிவனம் விடுதலை சிறுத்தைகள் சார்பில் பிப்ரவரி 14 அன்று இளை ஞர்களின் பார்வையில் பெரியார் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் விசிக மாவட்ட செயலாளர் தி. திலீபன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தொகுதி துணை அமைப்பாளர் செ. கார்த்தி அனை வரையும் வரவேற்று பேசினார்.
கழத்தின் சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கலந்து கொண்டு துவக்கவுரையாற்றினார் அவர் பேசும்போது திராவிடர் கழகமும் திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி என்றால் விசிக சேர்த்து மூன்று குழல் துப்பாக்கியாக செயல்படுகிறது என்று ஆசிரியர் சொல்லுவார். அதன் அடிப்படையில் இன்றைய காலத்தின் தேவைகருதி இளைஞர்கள் பார்வையில் பெரியார் என்ற தலைப்பில் விசிகவினர் ஏற்பாடு செய்த இன்றைய கூட்டம் காலத்தின் தேவைகருதி போடப்பட்ட கூட்டம் இதுபோன்ற கூட்டங்கள் அதிக அளவில் போடப்பட வேண்டும் என்று பேசினார்.விசிக சார்பில் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தந்தை பெரியார் எனக்கு தேசாபிமானமோ, பாஷாபிமானமோ கிடையாது மனிதாபிமானம் மட்டும் தான் உண்டு எனவும் அண்ணல் அம்பேத்கரை தலைவராகவும் தந்தை பெரியார் ஏற்றுக் கொண்டவர் எனவும்,கடவுள் மறுப்பு என்பதே மனிதநேயத்தை அடிப்படையாக கொண்டு தான் எனவும் பேசினார்.
நிகழ்ச்சியில் விசிக மாவட்ட செயலாளர்கள் சூ. மலைச்சாமி, வீர. பொன்னிவளவன், ஏ.தனஞ்செழியன், திண்டிவனம் திராவிடர் கழக மாவட்ட தலைவர் இர. அன்பழகன், மாவட்ட செயலாளர் தா. இளம்பரிதி, மாவட்ட காப்பாளர் செ.பரந்தாமன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தா. தம்பி பிரபாகரன், மாவட்டது.தலைவர் ச. அன்புக்கரசன், மு. பகுத்தறிவாளர் கழக செயலாளர் நவா. ஏழுமலை, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பா. வில்லவன் கோதை, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு. இ ரமேஷ், நகர இளைஞரணி கே. பாபு, பெரியார் பற்றாளர் கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். நகர இளைஞரணி அமைப்பாளர் ஆ. சுரேஷ் நன்றியுரையாற்றினார்