23.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
< பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்; இக்கொள்கை நம்மை 2000 ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு செல்லும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
< வாக்குச் சீட்டு முறையே சிறந்தது என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், உங்கள் நண்பர்தானே, அவரது பேச்சை கேளுங்கள் மோடி அவர்களே என்கிறது காங்கிரஸ் கட்சி.
< வரும் மார்ச் மாதத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 42 விழுக்காடு மசோதா சட்டமன்றத்தில் தாக்கல், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் உறுதி.
< உசாட் (USAID) நிதி 21 மில்லியன் டாலர் (180 கோடி) எனது நண்பர் மோடிக்கு தரப்பட்டுள்ளது, டிரம்ப் அதிரடி பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பிரதமரின் இரண்டாவது முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தி இந்து:
< ஹிந்திக்கு பதிலாக ஆங்கிலம் பயிற்று மொழி: பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் வேண்டுகோளின் பேரில், ஏகலைவன் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டு (2025-2026) தொடங்கி 9 ஆம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தும் என பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கம் (NESTS) சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
தி டெலிகிராப்:
< தேசிய கல்விக் கொள்கை ஹிந்தி பேசாத மாநிலங் களில் ஹிந்தியை திணிக்கும் முயற்சி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வி. நாராயணசாமி குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
< சிபிஎஸ்இ பள்ளி தொடங்க இனி மாநில அரசு அனுமதி அவசியமில்லை – புதிய அறிவிப்பு வெளியீடு
.- குடந்தை கருணா