கார்ப்பரேட்டுகள் பிஜேபிக்கு கொட்டிக் கொடுத்த தொகை ரூ.4 ஆயிரத்து 340 கோடி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி,பிப்.19- கடந்த நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஜனதாய சீா்திருத்தங்கள் சங்க (ஏடிஆா்) அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், அந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய தேசிய கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:

தோ்தல் ஆணையத்திடம் தேசிய கட்சிகள் சமா்ப்பித்த ஆண்டு கணக்குத் தணிக்கை அறிக்கையின்படி, 2023-2024ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் 50.96 சதவீதமான ரூ.2,211.69 கோடியை மட்டுமே அக்கட்சி செலவிட்டுள்ளது. அந்த நிதியாண்டில் காங்கிரசுக்கு ரூ.1,225.12 கோடி வருவாய் கிடைத்த நிலையில், அதில் 83.69 சதவீதமான ரூ.1,025.25 கோடியை அக்கட்சி செலவிட்டுள்ளது.

அந்த நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடையில் பெரும் பகுதி தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது. தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் முன்பு இந்த நன்கொடை பெறப்பட்டது.

தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ.1,685.63 கோடி, காங்கிரசுக்கு ரூ.828.36 கோடி, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.10.15 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *