இந்தியப் பிரதமர் மோடி மீது அமெரிக்கா வைத்திருக்கும் மரியாதை இதுதானா?

Viduthalai
4 Min Read

நியூயார்க், பிப். 16- இந்திய பிரதமர் மோடி மீது அமெரிக்கா வைத்திருக்கும் மரியாதை இதுதானா பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும் பொழுதே அமெரிக்காவிலிருந்து 119 இந்தியர்கள் கை கால்களில் விளங்கிடப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்
அமெரிக்காவில் சட்டவிரோத மாக வசிக்கும் தனது குடிமக்களை திரும்பப் பெற இந்தியா தயாராக உள்ளது, என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவில் உள்ள பல இந்தியர்கள் கொத்து கொத்தாக நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

நாடு கடத்தல் தொடர்பாக மோடியின் கருத்து
மனித கடத்தல் அதிகம் நடக்கிறது. இந்தியாவில் இருந்து பலரை ஏமாற்றி அமெரிக்கா கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பெரிய கனவுகள் இருக்கின்றன. அவர்களின் ஆசைகளை காரணம் காட்டி ஏமாற்றுகிறார்கள், அவர்களில் பெரும்பாலானோர் தவறாக வழிநடத்தப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டவர்கள்.
எனவே, இந்த முழு மனித கடத்தல் அமைப்பையும் நாம் தடுக்க வேண்டும். அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் தனது குடிமக்களை திரும்பப் பெற இந்தியா தயாராக உள்ளது, அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம், என்று பிரதமர் மோடி கூறினார்

நாடு கடத்தல் தீவிரம்
டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது. முதல் கட்ட மாக முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற் றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த சில நாட்களில் டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவார்கள் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, ராணுவ விமானங்கள் மூலம் குவாட்டமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு மக்கள் நாடு கடத்தப்பட்டனர். இப்போது இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

மீண்டும் நாடு கடத்தல்
இரண்டாவது கட்டமாக அமெரிக்காவில் இருந்து 119 இந்தியர்கள் நாடு கடத்தப் பட்டு உள்ளனர். நேற்று (15.2.2025) இவர்கள் விமானம் மூலம் அதிகாலை நாடு கடத் தப்பட்டனர். சங்கிலியில் கட்டப்பட்டு, போர் விமானத்தில் இவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான நிலையத்தில் இரவு 10 மணிக்கு இவர்கள் தரையிறங்குவார்கள். சட்டவிரோதமாக குடியேறிய 119 பேரில், 67 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 33 பேர் அரியானா வைச் சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், கோவா, மகா ராட்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என்று தகவல் வெளி யாகி உள்ளது.
சரியாக மோடி அமெரிக் காவில் இருந்த அதே நேரத்தில் டிரம்ப் இந்தியர்களை நாடுகடத்தி உள்ளார் என்பதுதான் இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20,407 இந்தியர்களை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ளது.

அவமானப்படுத்தப்படும் இந்தியர்கள்
இந்த விவகாரத்தில் இந்தியர்கள் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டு உள்ளனர். ராணுவ விமானத்தில் இந்தியர்களின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு உள்ளது. இப்படி கை, கால்களை கட்டிய பின்பே 48 மணி நேரம் அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்கள் நாடுகடத்தப்படும் குற்றவாளிகள் என்பதால் இப்படி மோசமாக நடத்தப்படுகிறார்கள். இந்தியர்களுக்கு இத்தனை ஆண்டு வரலாற்றில் அமெரிக்காவால் இவ்வளவு மோசமான அவமானம் நேர்ந்ததே இல்லை. அப்படி ஒரு அவமானம் இன்று நேர்ந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொத்துக் கொத்தாக தூக்கப்படும் இந்தியர்கள்
அமெரிக்காவில் இந்தியர்கள் சார்பாக நடத்தப்படும் கடைகள், உணவகங்களில் ரெய்டுகளை நடத்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப் படுகிறது. பொதுவாக இது போன்ற உணவகங்களில், கடைகளில் இந்திய மாணவர்கள்தான் வேலை பார்ப்பார்கள்.
ஆனால் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் பலர் படித்து முடித்து முறைகேடாக தங்கியிருக்கிறார்கள். அதாவது படிப்பிற்கான விசா முடித்து.. அதன் அவகாசம் முடிந்தும் பலர் முறைகேடாக தங்குகிறார்கள். சிலர் படிப்பு விசா வாங்கி பகுதி நேர வேலை பார்க்கிறார்கள்.

இதை இந்தியர்கள் பலர் கைச்செலவுக்கு பெற வேண்டும் என்று பணி செய்கிறார்கள். இவர்களை எல்லாம் டிரம்ப் வரும் காலத்தில் கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க சட்டப்படி மாணவர் விசா வாங்கியவர்கள். பகுதி நேர வேலை பார்க்க முடியாது. ஆனால் இதை மீறி இந்திய கடைகளில் இவர்கள் வேலை பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன.
முக்கியமாக உணவகங்களில், மால்களில் பலர் வேலை பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை கண்டுபிடிக்க சோதனை நடத்தும் திட்டத்தில் அந்நாட்டு அதிகாரிகள் உள்ளனர். அமெரிக்கா முதலில் அங்கே தங்கி உள்ள விசா இல்லாத இந்தியர்களை கணக்கெடுக்கும். படிப்பிற்கு விசா வாங்கி வேலை பார்ப்பவர்களை கணக்கு எடுக்கும். சுற்றுலா விசா வாங்கி கூடுதல் நாட்கள் தங்கி வேலை செய்பவர்களை கணக்கு எடுக்கும். எச் 1 பி விசா காலாவதி ஆனவர்களை கணக்கு எடுக்கும்.. பணிகள் நடக்கின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *