தாய்மொழி உறவுகள் தமிழ் இலக்கிய படைப்பாளிகள் கூட்டியக் கம் நடத்திய மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல், தாய்மொழி உறவுகள் முதலாம் ஆண்டு நிறைவு விழா, ஊர்ப்பெருமைகள் நூல் வெளியீட்டு விழா, தாய்மொழி உறவுகள் கவிதை வெளியீட்டு விழா மற்றும் கவிஞர்கள் , சமூக சேவகர்கள் , சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய அய்ம்பெரும் விழாவாக கடந்த 25.01.2025 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் மன்றத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது
முதல் நிகழ்வாக தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்து, திராவிடர் கழகத்தைச் சார்ந்த , ஓய்வு பெற்ற செவிலியக்கல்லூரி முதல்வர். பெரியார் செல்வி தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவேந்தலும், உறுதி மொழி யும் கூறப்பட்டது. முன்னதாக மொழிப்போரின் வரலாற்றையும் அதில் தந்தை பொரியாரின் பங்களிப் பையும் சிறப்பாக எடுத்துரைத்தார் பெரியார் செல்வி.
பிறகு தந்தை பெரியாரின் நினைவிடத்திற்குச்சென்று மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக துணைத்தலைவர் காஞ்சி கதிரவன் தந்தை பெரியாரைப்பற்றி சிறப்பாக உரையாற்றினார். காலை 8 மணி முதல் மாநிலக்கல்லூரி மாணவர்களின் பறை இசையும், முத்து ராஜா சிலம்பம் பயிற்சிப்பள்ளி யின் மாணவர்களின் சிலம்பம், வாள், கராத்தே மற்றும் யோகாசனம் நிகழ்ச்சிகள் நடந்தன.
தாய்மொழி உறவுகள் ஊர் பெருமைகள் கட்டுரை தொகுப்பு நூலை கவிஞர் ஞான ஷைலா மேரி வெளியிட அதை முனைவர் வசந்தி ராமன்,கவிஞர் செந்தாமரை உள்ளிட்ட கவிஞர்கள் பெற்றுக் கொண்டனர்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கருத்தரங்கம், கவிய ரங்கம், பட்டி மன்றம், நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை தாய்மொழி உறவுகள் நிறுவனர் முத்துவேலு பிரின்ஸ் ராமு அவர்களும், முனைவர் லோ. கலையரசி, ஒருங்கிணைப்பாளர்கள் சங்கத்தமிழச்சி. திட்டக்குடி த.செல்வ ராணி, கவிஞர் அமுதா சிங்காரவேலு மற்றும் முனைவர். சிவசங்கரி, மாஸ்டர் கராத்தே இரமேசு, அன் போடு அறம் செய் சீனிவாசன் ஆகியோரும் மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் நிகழ்வை ஒருங்கி ணைத்து நடத்தினார்கள். நிகழ்வில் பல தமிழ் ஆளுமைகள், சான்றோர் பெருமக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டார்கள்.
கருத்தரங்கில் பெரியாரும் தமிழும் என்ற தலைப்பில் முனைவர் ஜெகனும், பெரியாரும் திருக்குறளும் என்ற தலைப்பில் காஞ்சி கதிரவனும் மிகச்சிறப்பாக தமிழுக்கும் திருக்குறளுக்கும் தந்தை பெரியார் ஆற்றிய பணிகளை எடுத்துரைத்தார்கள்.
இறுதியில் கவிஞர் மேரி தன்ஷிகா நன்றி கூறினார்