அனைத்துத் துறைகளிலும் அதிகார அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவராக வர வேண்டும்

viduthalai
2 Min Read

பாட்னா, பிப்.6 ‘ஒவ்வொரு அதிகார அமைப்பிலும் தாழ்த்தப் பட்ட மக்கள் தலைமைப் பொறுப்பில் அமருவதை காண விரும்புகிறேன்’’ என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

பீகாரை சேர்ந்த விடுதலை போராட்ட வீரரும், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரும், காங்கிரஸ் ஆர்வலருமான ஜெக்லால் சவுத்ரியின் பிறந்த நாளையொட்டி தலைநகர் பாட்னாவில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலை வருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் சாசனம்மீது தாக்குதல்

“அரசியல் சாசனம் இருக்கும் வரை தாழ்த்தப்பட்ட மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினர் ஒரு நல்ல வாழ்க்கைக்கான நம்பிக்கையை கொண்டிருக்க முடியும். இதை தெரிந்து வைத் திருப்பதால்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பின்தங்கிய பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் அளித்திருப் பதையும், ஏராளமானோர் தேர்தலில் போட்டியிட டிக்கெட் பெற்றிருப்பதையும் மோடி சுட்டிக்காட்டுகிறார். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப் பினர்களின் அதிகாரத்தை அவர் பறித்து விட்டார். அவரது அமைச்சர்கள்கூட ஆர்.எஸ்.எஸ். பரிந்துரையின்பேரில் நியமிக்கப்பட்ட அதிகாரி களுடன்தான் செயல்படுகிறார்கள்.
நாட்டின் தற்போதைய அதிகார அமைப்பு மற் றும் நிறுவனங்களில் தாழ்த்தப் பட்டவர்களின் பங்களிப்பு இல்லை. அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு தாழ்த்தப்பட்ட மக்களை பா.ஜ.க. ஏமாற்றி வருகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள்
தலைவராக வேண்டும்

கல்வி நிறுவனங்களில், வினாத் தாள்களை உருவாக்கும் இடத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் எட்டவில்லை. நாட்டின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடமில்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை.
எனவே அதிகார வர்க்கம், தனியார் துறைகளில் தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வெறும் உறுப்பினராக இல்லாமல், தலைவர்களாக மாறும் நாளை காண விரும்புகிறேன்.

வெறும் அரசியல் பிரதி நிதித்துவம் மட்டும் போதாது. ஒவ்வொரு துறையிலும் தலைமைப் பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும். அதற்காக நான் தொடர்ந்து போராடுவேன்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முதல் படி, ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆகும். இதுதான் சமூகத்தின் ஒரு உண்மையான எக்ஸ்ரே ஆக இருக்கும். ஆனால் இதை மோடி அரசு தவிர்க்க விரும்புகிறது. ஆனால் நாங்கள் அதை நிறைவேற் றுவதில் உறுதியாக இருக்கிறோம்.
தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு போல, பீகாரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மேற்கொண்ட ஜாதிவாரி கணக் கெடுப்பு சிறப்பானதாக இல்லை.” இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *