கடலூர், பிப். 6- கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 26 1 2025 ஞாயிறு காலை 11 மணி அளவில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலை மையில் நடைபெற்றது.
கழகப் பொதுக்குழு உறுப்பினர் நா. தாமோ தரன், மாவட்ட கழக தலைவர் சொ. தண்ட பாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குறிஞ்சிப்பாடி நகர தலைவர் கனகராசு, வடலூர் நகரத் தலைவர் புலவர் ராவணன், நகர செயலாளர் இரா.குணசேகரன், முருகன் (நகர அமைப்பாளர்), மருவாய் சேகர் (ஒன்றிய அமைப்பாளர்), மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், மாவட்ட கழகத் துணைத் தலைவர் மணிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமநாதன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அருணாசலம், மாவட்ட கழக இணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி, மாவட்ட கழக செயலாளர் எழிழேந்தி, கடலூர் மாநகரத் தலைவர் தென் சிவகுமார், மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சிதம்பர த்தில் பிப்ரவரி 15 அன்று நடைபெற உள்ள கழகப் பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற அனைத்து உதவிகளையும் செய்வது என்று கலந்துரையாடல் கூட்டம் முடிவு செய்கிறது
மாவட்டம் முழுவதும் கழகத் தோழர்கள் தங்கள் இல்லங்களில் கொடி கம்பங்களை அமைத்து கழக கொடிகளை பறக்க விடுவது அவசியம்.
மாவட்டம் முழுவதும் பகுதி வாரியாக கழக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி அமைப்பு மற்றும் பிரச்சாரத்தை வேகப்படுத்துவது என்று முடிவாற்றப்பட்டது.
இறுதியில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.