இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் ஓராண்டில் 300% உயர்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2022-2023 நிதியாண்டில் ரூ.277.34 கோடி மதிப்பிலான 6,699 டிஜிட்டல் மோசடிகள் நடந்த நிலையில், 2023-2024 நிதியாண்டில் ரூ.1,457 மதிப்பிலான 29,082 மோசடிகள் நடந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் மோசடிகளை தடுக்க ஒன்றிய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளது.