நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை கண்டறிய பறக்கும் ரோபோவை அனுப்ப திட்டமிட்டுள்ளது சீனா. அதன் சாங்’இ-7 திட்டத்தின் பகுதியாக அனுப்பப்படவுள்ள 6 கால்கள் கொண்ட இந்த பறக்கும் ரோபோ, நிலவின் தென்துருவப் பகுதியில் உள்ள பள்ளங்களில் உறைந்திருக்கும் தண்ணீரை (பனிக்கட்டியை) கண்டறியும்.
2030ஆம் ஆண்டுக்குள் நிலவில் ஓர் ஆய்வு நிலையம் அமைக்கவுள்ள சீனாவின் திட்டத்துக்கு இந்த கண்டுபிடிப்பு உதவியாக இருக்கும்.