வடசென்னை: பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் அதிக அளவில் பங்கேற்க முடிவு
சோழிங்கநல்லூர், பிப்.5 சோழிங்கநல்லூர் மாவட்ட மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் முன்னரே அறிவிக்கப்பட்டத் தேதியான பிப்ரவரி 2 அன்று காலை 10 மணியளவில் சுண்ணாம்பு கொளத்தூர் விடுதலை நகர் பெரியார் படிப்பகத்தில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் கூட்டத்தினை தலைமையேற்று உரையாற்றிய மாவட்டத்தலைவர் வேலூர் பாண்டு கடந்த கூட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். படிப்பகத்தில் சிலைகள் அமைப்பது அதன் பொருட்டு, தேவைப்படும் நிதி ஆதாரம் குறித்துப் பேசினார்.
முன்னிலை வகித்த மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்தி ரன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சண்முகசுந்தரம், மாவட்டச் செயலாளர் விஜய் உத்தமன் ராஜ், மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்தியானந்தம், மற்றும் மாவட்டக் கழக தோழர்கள் உரையாற்றினர்.
இளைஞரணிக்குப் பொறுப்பாளர்கள் நியமனம்!
இம்மாத கூட்டத்தின் சிறப்பாக, மாவட்டந்தோறும் இளைஞரணியை திறன்பட கட்டமைக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மாநில இளை ஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, கலந்துகொண்டு இளைஞரணி கட்டமைப்பை வலுபடுத்த மேற்கொள்ள வேண்டிய செயல்திட்ட முறைகளை நோக்கவுரையாக வழங்கினார். அதைத் தொடர்ந்து மாவட்ட இளைஞரணி பொறுப்புகளை அறிவித்தார்.
அவை பின்வருமாறு:
1. மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்தியானந்தம்
2. மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர் ஆர். சந்தோஷ்
3. மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர் எம். சந்தோஷ் ஆகிய தோழர்களை பொறுப்பாளர்களாக அறி வித்தார். அதனைத் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் கருத்துரை வழங்கினார்.
கூட்டத்தின் முத்தாய்ப்பாக 9 சீர்மிகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக கலந்துகொண்ட தோழர்க ளுக்கு இனிப்பு, காரம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.
தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வருமாறு:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினரும், சுயமரியாதை வீரருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவிக்கிறது.
படிப்பகத்தில் தந்தை பெரியாரின் சிலை உடன் பொறியாளர் ஞான சுந்தரத்தின் சிலை மற்றும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம் அமைத்து, அவற்றினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைப்பதற்கான தேதி, தலைமையின் அறிவுறுத்தலின்படி ஜூன் மதத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது விழாவை சிறப்பாக நடத்துவதெனத் தீர்மானிக்கப்படுகிறது
தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த தெரு முனைக் கூட்டம் மார்ச் 8 அன்று மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் நடத்துவதென என தீர்மா னிக்கப்படுகிறது.
சோழிங்கநல்லூர் மாவட்டத்தில் கழக இளைஞரணி சார்பில் ஏராளமான இடங்களில் தகவல் பலகை அமைத்தல், துண்டறிக்கை பிரச்சாரம் செய்தல், தெருமுனைப் பிரச்சாரம் செய்தல். பெரியார் பேசுகிறார் நிகழ்வினை தொடர்ச்சியாக நடத்துதல் என தீர்மானிக்கப்படுகிறது.
சோழிங்கநல்லூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பாக நகரங்கள். ஒன்றி யம், ஊராட்சி, பேரூராட்சி, கிளைக் கழகங்கள், முழுவதும் கழக இலட்சியக் கொடியை ஏற்றியும் புதிய கிளைக் கழகம் அமைத்தும் கழக இளைஞரணியை புதுப்பிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
பிப்ரவரி 9 அன்று வடசென்னை மாவட்ட கழகம் சார்பில் தணிகாசலம் நகர் கொளத்தூரில் நடைபெறும் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் அதிக அளவில் பங்கேற்பது என் தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளே டான ‘விடுதலை’ நாளேட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக மாவட்ட கழக இளைஞரணி சார்பில் அதிக அளவில் சந்தாக்களை வழங்கிடவும், பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி வழங்கிடவும் முடிவு செய்யப்படுகிறது.
பிப்ரவரி 15 இல் சிதம்பரத்தில் நடை பெற இருக்கும் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பில் பெருமளவில் தோழர்கள் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.