பக்தியின் பெயரால் மகா சுரண்டல் ஒரு தேங்காய் 66 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்

1 Min Read

தேனி,பிப்.4- தேனி மாவட்டம் போடியில் பழைமை வாய்ந்த சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 7 நாட்களாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நோன்பு மேற்கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.

ஏலம்

சூரசம்ஹாரத்தை தொடர்ந்து முருகப் பெருமானுக்கும், வள்ளி -தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது.
இதனை முன்னிட்டு சிறப்பு யாகம் வளர்க்கப் பட்டு முருகன் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப் பட்டன.
கந்தசஷ்டி நோன்பு தொடங்கிய நாளில் இருந்து திருக்கல்யாண வைபவம் வரை பூஜையில் வைக்கப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டது.
கும்ப கலசத்தில் வைக்கப்பட்டிருந்த தேங்காயை செயல் அலுவலர் ஏலம் விட்டார். அதனை போடியை சேர்ந்த சுபிக்ஷா என்ற பெண் ரூ.66 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு இதே கோவிலில் நடந்த கந்தசஷ்டி விழாவில் பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ரூ.27 ஆயிரத்திற்கு ஒரு பக்தர் ஏலம் எடுத்தார்.

இதனைதொடர்ந்து கோவிலில் அதற்குரிய பணத்தை கட்டி தேங்காயை அவர் பெற்றுக் கொண்டார்.

பூஜிக்கப்பட்ட தேங்காயை வீட்டு பூஜை அறையில் வைத்தால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாம்.
அதன்படி பூஜையில் வைக்கப்பட்ட பல்வேறு பொருட்களும் ஏலம் விடப்பட்டது. அதனை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனராம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *