நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Viduthalai
1 Min Read

புதுடில்லி, பிப்.1 நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (1.2.2025) 8 ஆவது முறையாக வரவு– செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.
நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (31.1.2025) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று (1.2.2025) பட்ஜெட் அமர்வு தொடங்கியது. 2 ஆவது நாள் அமர்வு காலை 11 மணிக்கு வழக்கமான நடைமுறைகளுடன் அவை தொடங்கியது. இதையடுத்து காலை 11.10 மணி அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு களுக்கிடையே நிர்மலா சீதாராமன், தனது வரவு– செலவு கணக்கு உரையைத் தொடங்கினார். மகாகும்பமேளாவில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் பட்டியலை அர சாங்கம் வெளியிட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
இதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அவையில் முழக்க மிட்டனர். அவர்களை அவைத்தலைவர் கண்டித்த நிலையில், அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *