வாக்குப்பதிவு மய்யங்களின் காட்சிப் பதிவுகளை பாதுகாக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 Min Read

புதுடில்லி, பிப். 1- வாக்குப்பதிவு மய்யங்களில் பதிவான வீடியோ காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒவ்வொரு வாக்குப்பதிவு மய்யத்திலும் அதிகபட்ச வாக்காளா்களின் எண்ணிக்கையை 1,200-இல் இருந்து 1,500-ஆக உயா்த்தும் தோ்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

வாக்குப்பதிவு மய்யங்களில் வாக்காளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தோ்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக இந்து பிரகாஷ் சிங் என்பவா் பொது நல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தியது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரம் தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய தோ்தல் ஆணையம் அவகாசம் கோரியுள்ளது. மூன்று வாரங்களுக்குள் தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். அதேபோல் வழக்கமான நடைமுறையின்படி வாக்குப்பதிவு மய்யங்களின் சிசிடிவி காட்சிகளை தோ்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, வாக்குப்பதிவு மய்யங்களின் சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு வழங்க அனுமதி மறுப்பு உள்பட தோ்தல் விதிகள் 1961-இல் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இதற்கு தோ்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்கக்கோரி கடந்த 15ஆம் தேதி உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியிருந்த நிலையில் தற்போது மேலும் 3 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *